சமர்ப்பணம்


சமர்ப்பணம்
ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ

Tuesday 21 May 2013

அம்மாவே தெய்வம் உலகினிலே!



      ஸௌராஷ்ட்ரஇனமொழிஇலக்கியஇதழான வல்லரி (பூங்கொத்து) யில் பை4கு (தம்பிக்கு) பை2ல லேகு (முதல் கடிதம்) ஸௌராஷ்ட்ர எழுத்திலும் தமிழ் எழுத்திலும் வெளி வந்ததைப் படித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நம்பலாம் அல்லவா? இப்போது------

        நேற்று இரவு பை4கு (தம்பிக்கு) தி3வொ லேகு --- ஸௌராஷ்ட்ர எழுத்திலும் தமிழ் எழுத்திலும் எழுதி வெளியிட்டுள்ளேன்.

       ஸௌராஷ்ட்ர எழுத்து படிக்கத் தெரிந்த சான்றோர் தயை செய்து ஸௌராஷ்ட்ர எழுத்தில் உள்ளதைப் படியுங்கள்.குறையோ பிழையோ இருப்பின் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.ஏனெனில் நீங்கள்தான் என் ஸௌராஷ்ட்ர மொழி ஆசிரியர்.

       ஸௌராஷ்ட்ர எழுத்தை இன்னும் கற்காத அருமை அன்பர்கள் தமிழ் எழுத்தில் வெளியாகி உள்ளதையாவது படியுங்கள்.

       இந்தக் கட்டுரைத் தொடர் முதன் முதலில் பாஷாபிமானி பத்திரிகை ஆரம்பித்த சமயம் அதில் தொடராக எழுதப் பட்டு, பின்னர் நண்பர் திரு.எஸ்.டி.ஞானேஸ்வரன் அவர்களால் புத்தக உரு பெற்று --- சோலை முருகன் கல்யாண மண்டபத்தில் திரு.என்.எம்,ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் --- திரு.சி.எம்.வி. கிருஷ்ணமாச்சாரி அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை ஆர்வத்துடன் வந்து பெற்றவர் தெய்வத்திரு.பி.ஜே.சாந்தாராம் அவர்கள்.

**********************       *******************************               ******************

     எல்லாம் சரி…..ஒரு மன வேதனையைச் சொல்லட்டுமா? மனத் துயரை நெட்டுயிர்த்து வெளியிடுவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

      ‘’ பிறந்த நாடும் பேசும் தாய் மொழியும் நமதிரு கண்கள் ‘’– என்பதையே சான்றோர் --- ‘’ நாடும் மொழியும் நமதிரு கண்கள் ‘’ – எனச் சுருக்கமாகச் சொல்லிப் போந்தனர். இம்மட்டோ?

     நாயகி ஸ்வாமிகள் சொன்னார்களே, ‘’பாஷா பக்தி நீஸ்தெனொ பாத் நீஸ்தெ பொன்னொ ‘’—என்று. நானாக இருந்திருந்தால் ‘’…….. பாத் நீஸ்தக் மொன்னொ’’—என்று சற்று கடுமையாகவே சாடியிருப்பேன். (நாயகி ஸ்வாமிகளுக்கும் இந்தப் பாமரனுக்கும் உள்ள வேற்றுமையே இதுதானே )

      என் தாய் மொழிப் பற்று என்னிடம் எந்த அளவுக்கு இருக்கிறது?’ – என்று ஒவ்வொரு அன்பரும் ஒரு கணம் --- ஒரே ஒரு கணம் நெஞ்சில் கைவைத்து எண்ணிப் பாருங்கள்.

       ஸௌராஷ்ட்ர மொழியில் பேசத்தெரிந்த நம்மால் ஸௌராஷ்ட்ர மொழியில் எழுதப் படிக்கத் தெரியவில்லை என்றால் என்ன பொருள்?

      ஒரு விஷயம் சொல்லட்டுமா?

      மகன் கடல் கடந்து போய் அமெரிக்காவில் ‘’ஜேஜே’’—என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். இங்கே தாயோ பிள்ளைப் பாசத்தில் நொந்து நூலாகிக் கிடக்கிறாள்.என்றாலும் மகன் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை தொலைப்பேசியில் தாயுடன் பேசுகிறான்.

       போதுமா இந்த உறவு?

       வெறும் பேச்சு காற்றோட போச்சு!

       தாயின் அழகுருவத்தைக் கண்டு களிக்க அந்த மகனின் மனம் துடிக்காதா?

       நீங்கள் சொல்லலாம் இப்போதுதான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டதே! நினைத்த மாத்திரத்தில் கணிணியின் முன் அமர்ந்து சாட்டிங்காமே ஏதோ காமிரா இணைப்பும் மைக்கும் இருக்குமாமே! அதன் முன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டால் கணிணியில் உருவத்தைப் பார்த்துக் கொண்டே பேசி விடலாமாமே! சொல்லக் கேள்வி. இவ்வளவு பெரிய விஷயமெல்லாம் இந்தப் பாமரனுக்கு எங்கே தெரியப் போகிறது.?

        என்றாலும் ---------

        எல்லாம் சரி இவ்வளவு தூரம் விஞ்ஞானம் வளர்ந்த பிறகும் கூட என் அருமை ஸௌராஷ்ட்ர அன்பனுக்கு தன் தாய் மொழி எழுத்தைக் கற்க வேண்டும் என்ற துடிப்பு வரவில்லையே?

       இதைத்தான் உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் என்பேன்.

       இல்லையா பின் -----------

       நண்பா…. கணிணி சாட்டிங்கில் நீ உன் தாயின் நிழல் உருவத்தை மட்டும்தான் பார்க்க முடியும். --- அம்மாவைப் பரிவுடன் பாசத்துடன் தொட்டுப் பேசி --- அந்தத் தாயின் மடியில் ஒரு கணமேனும் தலை வைத்துப் படுத்து அந்த தெய்வானுபவத்தைப் பெற உங்கள் விஞ்ஞானம் பெற்றெடுத்த கணிணியின் சாட்டிங்கால் முடியுமா?

       ஆனால் -------------

       உங்கள் தாய்மொழி எழுத்தை மிகச் சில நாள்களில் கற்றாலே போதும் --- அந்த அன்னையின் உருவத்தைக் கண்டு களித்துப் பேரின்ப வெள்ளத்தில் நீந்தலாமே!

     எனதருமை ஸௌராஷ்ட்ர தோழா!....அந்த நன்னாள் எந்நாள்? இதற்கான விடை உன் கையில் தான் இருக்கிறது.

       இன்னொரு உண்மையைச் சொல்லட்டுமா?

      அனைவருக்கும் ஸௌராஷ்ட்ர எழுத்தைக் கற்பிக்கும் திட்டம்’ – ஒன்றை நான் தீட்டி அதற்காக ஒரு பாடத்திட்டத்தையும் (Syllabus )   தயாரித்து வைத்தேன்.அதன்படி வாரம் மூன்று நாள்கள்  எழுத்து தொடங்கி ஸௌராஷ்ட்ர கல்வி கற்பிக்கும் அத்திட்டம் இன்னும் என் உள்ளத்திலேயே உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் -----

       இது போன்ற அரும் பெறும் பணிகளைச் செய்ய எத்தனையோ பெரியவர்கள் இருக்கும் போது பாமரனாகிய நான் முந்திக் கொள்வது தகுமா? – என்று தான் தயங்குகிறேன்.ஆம்

      முந்திரிக் கொட்டையாக முந்த விரும்ப வில்லை. என்றாலும்-
     காலத்தின் கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்.

     பார்ப்போம்!

    நான் நினைப்பது ஒன்று என்னைப் படைத்தவன் நினைப்பது…..?

       யாரே  அறிவர்!
***********************************************************************************************************

No comments:

Post a Comment