சமர்ப்பணம்


சமர்ப்பணம்
ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ

Thursday 28 March 2013

நினைவாஞ்சலி -- C.M.V.

            1920ஆம் ஆண்டு!

            ஸௌராஷ்ட்ர இன மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி விட்ட ஆண்டு அது!

            ஆம், வேதங்களும் புராணங்களும் --எந்த ஸௌராஷ்ட்ர இனத்தவரை பிராமணர்கள் என்று சுட்டிக் காட்டுகிறதோ -- 1706 -- ஆம் ஆண்டு ராணி மங்கம்மாள் -- எந்த ஸௌராஷ்ட்ரர்களை பிராமணர்களே -- என்று தீர்ப்பு அளித்து சாஸனம் எழுதித் தந்தாரோ-- அந்த ஸ்ரேஷ்ட ஸௌராஷ்ட்ர இனத்தவரை அப்போது ஆண்டு கொண்டிருந்த ஆங்கில அரசு 5-- 6--1920ஆம் நாள் வெளியிட்ட உத்தரவில் சட்டசபைத் தேர்தலைப் பொறுத்த மட்டில் பிராமணர்அல்லாதார் பட்டியலில் சேர்த்து விட்டது.இதனை ------

            இதனை நாளிதழ்களில் கண்டதுமே அளவற்ற வியப்பும் வருத்தமும் கொண்டார் திரு சின்னக்கொண்டா சி.மு.வெங்கடாஜலபதி ஐயர் அவர்கள். தம் மன வேதனையை ஸௌராஷ்ட்ர இனச் சான்றோர்களுடன் -- பொது மக்களுடன் பகிர்ந்து கொண்டு --ஸௌராஷ்ட்ர மக்களின் கண்டனத்தை அரசிற்குத் தெரியப் படுத்தத் துடித்தார். அத் துடிப்பின் விளைவு --------

            1897 முதல்1900 வரை ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற்று, இடையில் இருபது ஆண்டு காலம் எம்முயற்சியும் செய்யப்படாதிருந்த ஸௌராஷ்ட்ர பிராமணர் மாநாடு -- நீண்ட --இருபதாண்டு கால இடைவெளிக்குப் பின் கூட்டப்பட்டது.

            மன்னுமா மதுரையில் -- ஆங்கில அரசிற்குத் தம் எதிர்ப்புக் குரலை ஓங்கிய முறையில் உரைத்திட --உணர்த்திட 1920 ஜூலை 2,3,4 -ஆம் நாட்களில் கூடிய ஸௌராஷ்ட்ர பிராஹ்மண ஐந்தாவது மஹாநாட்டிற்கு உபசரணைக் கமிட்டித் தலைவராக இருந்து -- தென்னாடெங்கிலும் இருந்து மதுரைக்கு வந்திருந்த பிரமுகர்களையும் பொதுமக்களையும் வரவேற்று வேண்டிய வசதிகளைச் செய்து தந்தும் மஹாநாடு சிறப்புற நடைபெறக் காரணமாய் இருந்தவர் ------

           திரு. சி.எம். வெங்கடாஜலபதி ஐயர் அவர்கள் தாய்மொழியான ஸௌராஷ்ட்ர மொழியில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும், இலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை பெற்று, புலவர்களுடன் அடிக்கடி இலக்கியஉரையாடல்களை  நிகழ்த்தித் தம் புலமையை வளர்த்துக் கொண்டவர்.1920இல் மருத்துவக் கல்லூரி மாணவராய் இருந்த திரு T.R. பத்மநாபய்யர் அவர்கள் அடிக்கடி இப்பெருந்தகையாரைச் சந்தித்து இலக்கிய உரையாடல்களில் மூழ்குவதுண்டு.

          திரு. சி.எம்.வெங்கடாஜலபதி ஐயர் அவர்கள் தம் இன மக்களின் எல்லாப் பிரச்சினைகளையும்--வரலாறு- கைத்தொழில்--வியாபாரம்--கல்வி,சிறப்பாகப் பெண்கள் கல்வி -- அரசியல் -- ஸௌராஷ்ட்ரப் பத்திரிகைகளையும் நுணுகிக் கண்ணுற்றும் ஆய்ந்தும் --அவற்றிற்குத் தீர்வு கண்டுள்ளார் என்பதை அன்னார் ஐந்தாவது மஹாநாட்டில் ஆற்றிய 33 பக்கங்கள் கொண்ட மாபெரும் வரவேற்புரையே தக்கச் சான்று.

          நம்மவர்கள்.கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதிலும் -- குறிப்பாக நம் இனப்பெண்களும் ஆண்களுக்கு நிகராகக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றிலங்க வேண்டும் மிகுந்த ஆர்வம் காட்டி உள்ளார். தம் கனவை நனவாக்க 1909 முதல்1911 வரை ஸௌராஷ்ட்ரா உயர் நிலைப் பள்ளி மேனேஜராக (இன்றைய தலைவர்&கௌரவ காரியதரிசி -- தாளாளர் பொறுப்புகளே அன்று மேனேஜர் என்ற ஒரே பதவியாக இருந்தது.)இருந்து இன்றைய பள்ளியின் உயர்நிலைக்கு அன்றே 'கால்கோள்விழா'நிகழ்த்திவிட்டார் எனலாம்.அல்லாமலும் 1906 --1908; 1912-1914; 1914--1917; 1917--1921 ஆகிய காலகட்டங்களில் ஸௌராஷ்ட்ரா உயர் நிலைப் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து நம் இனத்தவரின் கல்வி மேம்பாட்டிற்குப் பெரிதும் உழைத்துள்ளார்.

           1920இல் 'ஸௌராஷ்ட்ரா' என்ற பத்திரிகை மாதம் இருமுறையாக இருந்து பின் வார இதழ் ஆயிற்று. அதை நாளிதழ் ஆக்கிவிட வேண்டும் என்று பேரார்வம் காட்டி அதற்காக பத்திரிகைக்குச் சொந்தமாக அச்சுக் கூடம் ஒன்றை நிறுவவும் பத்திரிகை தாழ்வின்றி நடைபெற பெர்மனன்ட் பண்டை ஏற்படுத்தவும் விரும்பி -- தம் எண்ணத்தை ஐந்தாவது மஹாநாட்டுப் வரவேற்புரையில் வெளியிட்டுள்ளார்.இவ்வாறு----

            மதுரை ஸௌராஷ்ட்ர உயர் நிலைப் பள்ளி,--மதுரை ஸௌராஷ்ட்ர ஸபை போன்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்து நற் தொண்டாற்றிய திரு. சி.எம். வெங்கடாஜலபதி ஐயர் அவர்களின் திருவடிகளுக்கு

           ---இம்மூன்றாம் இதழை பணிவோடு, பக்தியோடு சமர்ப்பித்து நினைவஞ்சலி செலுத்துகிறோம்.

           அவர் நினைவு -- எங்கள் இதயத்தில் சேரும் துணிவு. அத்துணிவுடன் பாஷாபிமானியின் பணிகளைத் தொடர்வோம். வெற்றிப் பெருமிதம் கொள்வோம்.

                     நன்றி; பாஷாபிமானி --ராக்ஷஸ-- வைகாசி -- 15--5--1975

No comments:

Post a Comment