சமர்ப்பணம்


சமர்ப்பணம்
ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ

Friday 17 January 2014

தெய்வ அநுக்ரஹம்

ஸௌராஷ்ட்ர  எழுத்தறியாத  ஸௌராஷ்ட்ரர்கள்

நாடெங்கும்  விரவிக்  கிடக்கிறார்கள்!

எங்கு  இருக்கிறது  ஸௌராஷ்ட்ரம்?

எதில்  இருக்கிறது  ஸௌராஷ்ட்ரம்?

தமிழும்  தெலுங்கும்  கன்னடத்துடன்

கலந்தல்லவோ  இருக்கிறது  ஸௌராஷ்ட்ரம்!      -1-


ஸௌரஸேனி  இனத்தின்  முதல்தோன்றல்

மூத்தமொழி  ஆனால்-எழுதக்  கற்றோர்

எத்தனைப்  பெயரர்கள்  உள்ளனர்?

ஸௌராஷ்ட்ரம்  எழுதக்  கற்றால்

கிடைக்குமா  வேலை  சேருமா  பணம்?

கேட்கிறான்  என்-ஸௌராஷ்ட்ர  சகோதரன்!       -2-


பெற்றத்  தாய்க்குச்  சோறு-போடுவதால்

சொத்து  கிடைக்குமா?  என்னும்

அற்பக்  கேள்விக்கும்  இதற்கும்

வேறுபாடு  ஏதேனும்  உண்டோகொல்?

பொற்ற  தாய்க்குச்  சோறிடும்  கடமை-மறந்தோர்

ஒதுங்குக  நீங்கள்-கற்க  வேண்டாம்  நும்தாய்மொழியை!  -3-


பெற்றத்  தாய்க்குச்  சோறிடல்  கடமை-யது

தெய்வப்  பிரசாதம்  என-உணர்ந்தோர்  மட்டுமே

வாரீர்!  நீங்கள்  மட்டுமே  கற்றிடத்  தக்கோர்

நம்-ஸௌராஷ்ட்ரம்  உங்களுக்கே  சொந்தம்!

தத்தம்  தாய்மொழி  எழுதப்படிக்கத்  தெரிந்தோருக்கே

தெய்வ  அநுக்ரஹம்  உண்டு  என்றென்றும்!        -4-

1 comment:

  1. lipi veLo, bhaaShe veLo.
    diyye kavlili manDe phoDlan hOnaa.
    oNTe lipi kitkokii bhaaShenuk upayOg hOy.
    oNTe bhaShe kitkokii lipinum likkuvaay.
    amre mahaanun telugu, tamil, devanagari lipinum likkiraas. srii Rama raain tenga lipim likkiraas.
    attaa dinnum internettum likkattak Roman (English) lipi jukku upayOg hOres.
    amre bhaaShem likkuno, kOn lipim nhaa likkuvaay.
    bhaaShEs mukhyam, lipi mukhyam nhaa..
    amre mahaanun vaaT dekkaDraas.

    ReplyDelete