ஸௌராஷ்ட்ர நந்தவனம் பாப்பா ---இங்கு ஸகலமும் உண்டடி பாப்பா! பாராட்டிப் போற்றத் தகும் --- பாவலர் பலரும் நிறைந்த நந்தவனம்! (ஸௌராஷ்ட்ர)--1-- நீதி ஸம்பு மணக்கும் -- ராமராயின் நந்தி நிகண்டும் சிறக்கும்! மீதி நூல்கள் எண்ணின் -- அங்கே மேனி சிலிர்க்கும்....அப்பப்பா! (ஸௌராஷ்ட்ர)-2-- பஞ்சல் சரித்ரு ஒலிக்கும் ---அழகரார்யர் படைப்பெலாம் கனிந்து சிறக்கும்! ஊஞ்சல் ஆடிடும் சுகம்போல் -- நாயகி வள்ளல் கீர்த்தனைகள் இனிக்கும்! (ஸௌராஷ்ட்ரா)--3-- வேங்கட ஸூரிராமா யணம் --தினம் செய்யணும் பாரா யணம்! பாங்குடன் காவியம் செய்த -- பாவலர் பலரும் வளர்த்த நந்தவனம்! (ஸௌராஷ்ட்ர)--4-- நாளும் இவற்றைக் கற்றிடு -- பாப்பா நாளும் முயன்றிதைப் போற்றிடு! வாழ்வுக் கதுவழி காட்டிடும் -- உன் தாழ்வுக் குறியெலாம் ஓட்டிடும் (ஸௌராஷ்ட்ரா)--5-- *** பாஷாபிமானி --1975 இல் பிரசுரமானது.மாதம் நினைவில்லை.
சமர்ப்பணம்
சமர்ப்பணம் | |
![]() | ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ |
Thursday, 28 March 2013
பாப்பா பாட்டு ஸௌராஷ்ட்ரா நந்தவனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment