சமர்ப்பணம்


சமர்ப்பணம்
ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ

Sunday, 15 September 2013

குரு தியான் காரி மொந்நு !

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று ஸௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் நாற்பது ஆண்டுகால இனிய உணர்வும், உறவும் அனுபவிக்கும் இன்ப நிகழ்வு நடைபெற்றது. ஆம், 1971-1972 ஆம் கல்வியாண்டில் பயின்ற ஸௌராஷ்ட்ர உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி தத்தம் பழைய-இனிய நினைவுகளை நுகரத் திட்டமிட்டு-அதே வேளையில் தங்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களையும் அழைத்து கௌரவிப்பது என முடிவெடுத்து ஆறு மாதகால உழைப்பில் எழுபது மாணவர்களையும்(!) பதினைந்து ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி தங்களின் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தங்களின் ஆசிரியர் 15 பேருக்கும் பொன்னாடை போர்த்தி ஏராளமான நினைவுப் பரிசுகளை வாரி வழங்கி கௌரவித்ததுடன் மதிய உணவும் அளித்து விருந்து உபசாரம் செய்தும் மகிழ்ந்தனர்.
அந்நிகழ்வின் சாட்சியாக நிற்கும் இனிய காட்சிகள் இதோ---