சமர்ப்பணம்


சமர்ப்பணம்
ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ

Sunday, 16 February 2014

ஏக்டி பாஙாலி அக்கர்! ஏக்டி பாஙாலி ப்ராண்!

 
 (குறிப்பு;-15-3-1975ஆம் நாளிட்ட பாஷாபிமானி முதல் இதழில்-என்னால் எழுதப்பட்டுப் பிரசுரமான இக்கட்டுரையை உங்கள் பார்வைக்குப் படைக்கிறேன்.நன்றி)

மொழி என்பது சிந்தனைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் துணை நிற்கக்கூடிய ஒரு கருவி.இன்னமும் கூறப்புகின் மனித உணர்வின் உணவு எனலாகும்.மொழி உருவாகத் தேவை சொற்கள். சொற்களாவது ஒலியினது சேர்க்கை. இதனை நன்னூலார் "மொழி முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து-(நன்னூல்-எழுத்தியல்-நூற்பா-58.) என்பார். இஃதென்னையோவெனின், "மொழி முதற் காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியாவது எழுத்து’’-என்றவாறு எழுத்திற்கு இலக்கணம் சுட்டினார் என்ப. இதனுள்ளும்,’’அணுத்திரள் ஒலி எழுத்து- என்று கூறாது "மொழி முதற் காரணமாம்’ “-என்று சிறப்பித்தோதிய தென்னையோவெனின்; "முற்கு,வீளை" (முற்கு=இருமல் , வீளை=விசில்ஒலி) முதலியவற்றிற்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலி எழுத்தாகாமையின் "மொழி முதற் காரணமாம் ஒலி " என்னும் மிகையானே விதந்துரைத்தார் என்க.

உரைக்கவே, மொழிக்கும் எழுத்திற்கும் உள்ள உறவு உணர்த்த லாயிற்று. மொழியின் ஒரு கூறாகிய ஒலி(பேச்சு) கட்புலனாகா மையின்,ஒலிக்கு உருவம் சமைத்து எழுத்தாக்கினார் என்ப. ஆக்கவே, மொழியின் உயிர்- ஒலியாம் உரையும், மொழியின் உடல் எழுத்தாம் வரிவடிவம் ஆயிற்று. ஆயினமையால் மொழியின் எழுத்தினை நீக்குவ தென்பது உடலினை அழித்திடும் "கொலைத்தொழிலுக்கு" ஒப்பவாம் என்ப. அல்லாமலும் 'கண்ணன்'-என்று குறிப்பிடுங்கால் அது கண்ணனது உயிரைக் குறிப்பிடுமா?-அன்றி கண்ணனின் உடலைக் குறிப்பிடுமா?- என்றறிதல் வேண்டும். கண்ணன் என்பதோ உயிரும்- உடலும் கலந்த ஒருவனையேக் குறிப்பிடுமேயன்றி அவனு உயிரை மட்டும் அல்லது அவனது உடலை மட்டும் குறிப்பிடாதென்பது தெரிதருதேற்றம். அஃதென்னையோவெனின் உடல் நீங்கிய உயிர் மட்டுமே எனின் அதனை உலகத்தார் ‘கண்ணன்-என விளித்திடார்; மாறாக 'ஆவி,பேய்' - எனப் பல்லாற்றானுமே பகர்வாராயின்.உடல் மட்டுமோ எனின் அதனையும் 'பிணம்' - என்ற சொல்லாலேயே குறிப்பரேயன்றி கண்ணன் - என்று விளித்திடார். இவ்வுலக இயல்பானே மொழியாவது உரையும் எழுத்தும் விரவியதொரு நிலை என்பது பெற்றித்தாம். பெறவே, ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் திருவாய் மலர்ந்தருளிய, "பா4ஷா ப4க்தி நீ:ஸ்தெனொ பா4த் நீ:ஸ்தெ பொ4ன்னொ- என்பதனுள் குறிக்கப் பெற்ற பா4ஷா-என்பதும் ஒலியும் எழுத்தும் விரவிய நிலையையே குறித்தார் என்க. அல்லாமலும், "சோறு உண்" என்பார் சோற்றினை மட்டும் இடாது அதற்கு உடனாய குழம்பு, ரசம், தயிர் - போன்றனவும் இடுவதே போன்று - சோறு என்பது சோற்றை மட்டும் குறிக்காது மேற்கூறிப்போந்த பிறவும் குறித்தாற் போன்று - பாஷை என்பது ஒலியும்- அதன் விழியாய எழுத்தும் குறித்தார் என்க.

இனி, எழுத்தாவது அஃதென்னையோவெனின் கூறுதும், எழுத்து என்பார் ஈரெழுத்தினைக் காட்டுவாராயினர். அதனுள் 1) தேவநாகரி என்ப தொன்று, 2) ஸௌராஷ்ட்ர எழுத்து என்ப தொன்றுமாம். இதனுள்ளும் பேரறிவு படைத்த ஸௌராஷ்ட்ர மொழி ஆராய்ச்சியாளருள் (ஸௌராஷ்ட்ர மணி தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப் பட்ட இருவருள்) ஒருவர் தேவநாகரி என்பதோர் எழுத்து ஸௌராஷ்ட்ரப் பிரதேசத்தில் பிறந்தது என்று தமது மதிப்பிற்குரிய-நாகரிகம் மிகுந்த கட்டுரை ஒன்றில் கூறினார் என்க. நம் சொந்த மண்ணில் பிறந்த எழுத்தேயாகலின் - அரைகுறை - உரைக்கும், கவிக்கும், யாப்பிற்கும் பொருள் காணமாட்டாது, இருளில் விளக்கேந்தி நிற்கும் குருடன் போல்-புலவர் எனக் கூறிக்கொள்ளும்-இளம் புலவனான-இப்பாமரன் தேவநாகரியிலேயே இனி, அடியேனின் அன்னை மொழியினை எழுதுவதென்று முடிவு செய்தானாக. செய்தக்கால் வடமொழி இலக்கிய,புராண, வேத, வேதாந்தங்களின் துறைபோய அறிஞரானஆச்சாரிய விநோபாபாவே அவர்கள் ‘காந்திமார்க்-ஹிந்தி அக்.,74-இதழில் எழுதிய கட்டுரை ஒன்றைத் துரதிர்ஷ்டவசமாய்க் கண்டிட நேர்ந்தது.அது,இது:-

"மொழியைப் போல் எழுத்தும் உணர்ச்சிபூர்வமான பொருள். ஆகையால் இதைக் கட்டாயமாகவோ, வற்புறுத்தலாகவோ அறிமுகப் படுத்த நான் விரும்பவில்லை.-என்றவாறு கூறிப்போந்த ஆச்சாரியர் தொடர்ந்து தேவநாகரியின் பிறப்பைக் கூறுவாராயினார். அஃதென்னையோ வெனின் காட்டுதும்-

தேவநாகரி என்று இதற்கு எப்படிப் பெயர் வந்த்து?

"வடமொழியில் காசிமாநகருக்கு, 'தேவநகர்' -என்று பெயர். முன்பு பிராமி லிபியின் பல வடிவங்களைப் பயன் படுத்தி வந்த வட்டார மொழியினர் யாவரும் காசிமாநகருள் ஒன்றுகூடினார்கள். ஒரு பொது லிபியை ஏற்க வேண்டும் என்று முடிவாயிற்று. பலவகை லிபி வடிவங்களையும் ஆராய்ந்து இறுதியாக, இந்த நாகரி லிபியை உருவாக்கினார்கள். அதையே வடஇந்திய வட்டார மொழிகளுக்கும் பண்டிதர் மொழியாகிய ஸமஸ்கிருதத்திற்கும் பொது எழுத்தாகவே ஏற்றுக் கொண்டார்கள்.- (ஆதாரம் :- மஞ்சரி-ஜனவரி1975-பாவே எழுதிய கட்டுரை).

ஆச்சாரியா விநோபாபாவேயின் கூற்றினை நோக்குங்கால், "தேவநாகரி என்பது வட்டார மொழியினர் சிலர் காசியின்கண் ஒருங்கே கூடி பல மொழிகளின் பல வடிவங்களையும் ஆராய்ந்து தொகுத்தே, 'தேவநாகரி' - என்ற வரிவடிவினை ஆக்கினர் என்பது பெற்றாம். பெறவே, இதன்கண் பயன் யாதோவெனின் கூறுதும், பாரதநாட்டின்கண் சிற்சில மொழியினர் தமக்குரிய வரிவடிவமின்றி அவதியுறுவார் - இதனைப்பெற்றுத் தம் மொழிக்கு உருசமைத்திடலாம் என்பது குறியாம். குறியாகவே, தேவநாகரி என்பது, விழியிலார்க்கு விழிதந்திடும் நிறுவனம் போலாயது என்பது வெள்ளிடைமலை. அல்லாமலும், இது பல மொழி எழுத்துகளின் சேர்க்கையே அன்றி(ஸௌராஷ்ட்ர மொழி ஆராய்ச்சியாளரான என் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ மாமேதையின் வழியிற் கூறின் எழுத்துத் திருட்டாம் திரட்டேயன்றி) வேறன்று என்பதும் பெற்றாம்.எனவே கூறுதும், விழியிலார் அவ்விரவல்-(திருட்டு)விழியைப் பெறட்டும். விழியுடைய நமக்கு அஃதெற்றுக்கு?திருட்டு விழி திருட்டு முழியைத்தான் தரும் என்பது உலகிடை வாழ்வோர் உணர்ந்தனவேயாம் என்க.

இறுதியாக, மஞ்சரி ஜனவரி1975 இதழில் டாக்டர் ப்ரபாகர் மாச்வே என்பார் எழுதிய, 'பங்களாதேஷ் இலக்கியம்' -என்றிட்டு வந்துற்ற கட்டுரையின் ஒரு பகுதியினைக்காட்டி இதனை முடிப்பேனாக :-

"இரவு-12 மணியிலிருந்து இலக்கிய விழாவைப் பற்றிய தொலைக்காட்சிகளை டாக்கா டெலிவிஷன் நிலையத்திலிருந்து ஒலி பரப்பினார்கள். இரவு முற்றும் என்னால் விழித்திருக்கத்தான் இயலவில்லை. அதிகாலையில் அகாதமியின் பிரதமச் செயலாளர் எங்களுக்கு இரு மலர் வளையங்களைத் தந்து, மறைந்த இலக்கிய வாதிகளின் சமாதியில் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். சமாதிக்கு, ‘ஷஹீத்மீலார்-என்று பெயர். பின்பு ஏராளமான பதிப்புகளையும் வாசகங்களையும் தாங்கியதொரு பிரமாண்டமான ஊர்வலம் இங்கிருந்து புறப்பட்டது. "ஏக்டி பாஙாலி அக்கர்! ஏக்டி பாஙாலி ப்ராண்" (ஒவ்வொரு வங்கமொழி எழுத்துக்குமாக ஒவ்வொரு வங்காளியும் உயிர்த்தியாகம் புரியக் கடமைப்பட்டவன்.) என்ற ஒலிகள் கோஷங்களாக மாறி வானைப் பிளந்தன!

இந்த வங்க உணர்வு என்றன் தங்கச் ஸௌராஷ்ட்ரருக்கு உதித்திடும் நாளே ஸௌராஷ்ட்ர அன்னைதம் எழிலைக் காத்திடக் கங்கணம் கட்டிடும் நாளாம் என்க.   

Saturday, 8 February 2014

Doubt - 1

Dear Sourashtra Friends,

Namaste! For a very long time, there has been a doubt in my mind which i want to clear before you. According to our history, when did we come here from Sourashtra? A few people say it may be during the Islamic invasion but according to Mondasar's stone carving, this is said to be false and that before the invasion, some Sourashtrians who were experts in weaving were forced to come to the south by the South Indian Kings to weave clothes for their palace people. I have shared the information regarding this in my essay which is called a compilation of letters called "பை4கு - 2". But at this moment, this is not my doubt.

According to historical references, some Sourashtrians were believed to be Rishis and some weavers who weaved clothes for the deities of Somanath Temple. 

But my doubt here is, unless they were Shaivites, who adorned sacred ash on their forehead, they couldn't have worked in the Somanath temple. 

Here are two examples to show how Sourastrians might have changes sects. 

When they arrived in South India, specifically Vijayanagar, they might have changed to a different sect because the king of Vijayanagar especially Krishnadevarayar was a Vaishnav king. Since, the people of a kingdom follow their king, the Sourashtrians who had come to Vijaynagar would have changed sects. This is my strong belief. 

Another example we know is that of a few Sourashtrians who came to TamilNadu from Andhra.  Nayakkar kings, especially Thirumalai Nayakkar of Madurai were Vaishnavaites. We know the history of how the king of Madurai Thirumalai Nayakkar supported Sourashtra and gave them place to stay near the palace. These Sourastrians were originally Shaivaites, who used to wear sacred ash on their foreheads but when they came to Andhra Pradesh, they changed to the Vaishnavaites sect. This happens to be my belief. 

Here is a thought. Shaivites use "Iyer" as their surname but Vaishnavaites use "Iyengar". If they apply sacred ash on their forehead they are Shaivaites and if they wear "Namam" on their foreheads, they are Vaishnavaites. But we Sourashtrians, use the surname Iyer and wear "Namam" on our foreheads. Isn't that contradictory? But, the Sourashtra pundits use "Iyengar" as their surnames and wear "Namam" on their foreheads. This is and important thing here. 

Our forefathers, when they lived in our homeland were Shaivites. Due to certain unavoidable situations at those times, they had to move away from their homeland and come to another place where they had no choice, but to change to the Vaishnavaites sect. This can be true because of the fact  that our ancestors had "Iyer" as their surname. This is my opinion.

I am not here to argue that this is right. There are many historians among us. If they research on this, that is on whether Sourashtrians are "Iyer" or "Iyengars", then the truth might prevail. This is my humble opinion. I am not here to talk about the difference between "Iyer" and "Iyengars" and I know that whether it is "Iyer" or "Iyengar". they belong to the Hindu religion.

 I am writing this because I want to clarify the issue. What I have written may be or may not be wrong, but I request you to take what is right.


Wednesday, 22 January 2014

ஒண்டெ ஸெந்தே3வ்

   ப்ராம பொ3ரெ ஸௌராஷ்ட்ர பை4நுகு,

   மொரெ மொன்னு பொ3ரெ நமஸ்கார்.
ஜுகு2 தி3ன்னுதோன் மொரெ மொன்னும் ஒகெ ஸெந்தே3வ் மூள்சொ2டி நெருடைலேத் ஸேத்தெ. தெல்லெ துரெ ஸநிக் கள்ளி அவ்ன மெனி ஹவ்ட3ரேஸ்.

      தீ, காயொனா மெனெதி3, ஸௌராஷ்ட்ருன் சரித்ருதா3னுக் அமி ஸௌராஷ்ட்ர தே3ஸ் ஸொடி3 அவெயோ கொ3ப்போ3? –தெ’வ்ட3 தெ3னு ‘’து2ரிடெ3 ரஜான் ஜெடா3க் அவெ வேளும்!’’-மெனி மெனராஸ். ஹொயெதி மெள்ளி மாண்டே3ஸார் டங்கி3னிதானுக் தீ வாது3ன் ஸெர்க்கனா. துரிடெ3 ரஜான் ஜெடா3க் அவன் முல்லாமூஸ் ஸௌராஷ்ட்ருனும் ருவ்வொ தெ3ங்க – தெங்க மக3 விந்நிம் ஸேத்தெ விக்ஷுன் ஸீத்தி தெக்ஷண் போகு3ம் ராஜ்ஜல்லேத் ஹொதெ3 ரஜானுன் தெவ்ட3 தெ3னு—தெங்க2 ரவுளும் ஸேத்தெங்க2 பஜெ பொ2டெ3 வஸ்தி2ரமுன் வினத்தக்மெனி ப3ல்வந்து33ன் பொ3ல்ஜீராஸ் மெனி தெவ்டொ3 சரித்ரு லிக்குநாருன் ஸங்கி3ராஸ். எக2 தெ3ரெ விவருன் மீ லிக்கெ பை3கு கெனன் வத்தா23ந்தி3னிம் விஸ்தார்கன் லிக்கிரெஸ்.

       ஈ ஒண்டெ3 போகு3ம் ரதொ3 அத்த மொரெ விக்ஷ் ஹொயெ ஸெந்தே3வ் எல்தெ நா;. ஸௌராஷ்ட்ருனும் தெவ்ட3 தெ3னு ரிஷின்கன் ஹொதி3ராஸ் மெனிகினு—அங்கு3ன் ஒ-ளதெ3னு ஸோமநாத் த3வ்ராம் – தே3வுனுக் பஜெ ஹொயெ பொ3ட்33ல்னு விநிதி3லேத்3 ஹொதி3ராஸ் மெனிகின் மெள்ளி தெ2வ்ட3 சரித்ரு லிக்குநாருன் ஸங்கி3 தொ3வ்ராஸ்.

       அத்த மொரெ புஸினி காயொநாமெனெதி3 – ஸௌராஷ்ட்ருன் கோன் ஒண்டெ3 வித3முதீ3 ஸோமநாத் த3வ்ரா தெ3ய்வு கைங்க3ரியமுனுன் கெர்லேத் ஹொதி3ராஸ் மெனெதி3 தெனு தீ வேள் சைவ மதமு செராத்தெனுக3னூஸ்தெனு ஹொதிரநொ...தெக3 ஹாலிம் தெனு கபா3லும் பி3கி2த் லவ்லாத்தெனுகனூஸ்  ரீ’ரனொ.

      பல்லொ ஸௌராஷ்ட்ருனு தக்ஷண் போகு3ம் அவெ பராதுக்- விஜயநகருமு ஜிவன் நிகிளெ வேளுமூஸ் – தெங்க லோபுலாம் மதமர்ச்சயினி ஹொயிரனொ. ககொனா மெனெதி விஜயநகர ரஜான்- விக்ஷேஸ்கன் ஸங்குன பொடெஸ்- கிருஷ்ணதேவராயர் வங்க3ள்னு வைஷ்ணவர்னுகன் ஹொதிராஸ்மெனி சரித்ருன் களடரேஸ்.

      ‘’ரஜொ கோன் வாட்கீ தீ வாடூஸ் பிரஜைனுக்’’-மெனி மெனன் ஸொகன் சைவர்னுகன் ஹொதெ ஸௌராஷ்ட்ருன் ஆந்திரப்பிரதேஸ் அவி ஜிவன் நிகிளெ வேள் ரீஸ் வைஷ்ணவர்னுகன் ஹொய்ரனொ மெனத்தெ மொரெ அபிப்பிராயம். தெக ப2ல்லொ மெள்ளி ஆந்திர ப்ரதே3ஸும்ரீ; நிகிளெ ஒ-ள தெனு தமிழ்நாடும் அவ்யாஸ். ஏட் மெல்லி மதுரெ, திருச்சி ஸோன் தெவ்டொ கா3முனும் ராஜ்ஜலெ நாயக்க ரஜான்-விக்ஷேஸ்கன் ஸங்குன மெனெத் திருமலை நாயக்கர்- வைஷ்ணவ மதமுசெரெ ரஜொ மெனத்தெ அம்கொ களயெ சமாச்சாருனூஸ். ஈ திருமலை ரஜொ ஸௌராஷ்ட்ருன்ஹோர் ஜுக்கு ப்ராம தொவ்லி-ஆத3ரவ் கெரி- தெங்க தெக ரவுளு சுட்டூருஸ் காப் ரவடெஸ் மெனத்திஸான் சரித்ரு அஸ்கி அம்கொ களயீஸ் ஸேத்தெ.

     தெகஹால், மாய் பூ3ஞிர் சைவர்னுகன் ஹொதெ- கபாலும்பி3கி2த் லவ்லி ஹொதெ- ஸௌராஷ்ட்ருன் ஆந்திரப் பிரதே3ஸும் அவெ வேள் ரீ; வைஷ்ணவர்னுகன் ஹொய்யிரான் மெனத்தெ மொரெ அபிப்பிராயம்.

       ருவ்வொ ஹவ்டி ஸவொ. ப3வள்னுமு சைவமதமு செராத்தெனு தெங்க நாவ் பஸ்கல்லொ ஐயர் மெனி தைலன். வைஷ்ணவ மதம்கெரின் ஐயங்கார் மெனி தைலன். தீ ப3வள்னும் நாவ் பஸ்கல்லொ ஐயர் மெனி தைலிரியாத்தெனு கபாலும் பி3கி2த் லவ்லி சைவமதமு அனுஷ்டானம் கெரத்தெனுகனூஸ்ரான். பவள்னும் நாவ் பஸ்கட் ஐயங்கார் தைல்ரியாஸ்தெனூஸ் கபாலும் நாம் லவ்லி வைஷ்ணவர்னுகோன்ரான்.

      ஹொயெஸ் அவ்ராம் அமி—ஸௌராஷ்ட்ருன் சீதாராமய்யர், வெங்கடாஜலபதிஐயர், ராமகிருஷ்ணய்யர் மெனிகின் தைலி கபாலும் நாம் லவ்லி ஸேத்தெ ருவ்வொ வித்தியாஸ்கன் லக3ரெனி? ஸௌராஷ்ட்ருனுமூஸ் புரோகிதம் கெரரிய ஐயானூஸ் தெங்க நாவ் பஸ்கட் ஐயங்கார் மெனி தைலன்.

      அவ்ரெ ஒள்டு3ன் ப2ல்லாம் அவ்ரெ மாய் பொஞிர் ஜிவ்லேத் ரதோஸ்- சைவர்னுகன் அனுஷ்டான் கெர்லி- தெக ப2ல்லொ ஜிவன் அவெத்தாம் தெவ்டொ2 ஹேது3னு ஹால்தி வைஷ்ணவ சம்பிரதாயமு- அனுஷ்டானமு- மர்ச்சில்ரவ்வாய் மெனத்தெக அட்களமூஸ்- அவ்ரெ மொட்டான் நாவு பஸ்கட் ஸேத்தெ ஐயர் மெனத்தெ வத்தொ மெனி மீ அவ்டரியொ.

      எல்லேஸ் ஸெர்க்கமெனி மீ மெனத்தக் அவரெனி. அவ்ராம் சரித்திருன் சொவ்தி—களல்லி—ஆராய்ச்சின் கெரெ சரித்ரு ஞானவானுன் ஒ-ள தெனு ஸே.தெனு அஸ்கி ஈ விஷயம் தெ3ரி ஆராய்ச்சின் கெரி ஸௌராஷ்ட்ருன் நிஜ்ஜமூஸ் சைவ அனுஷ்டான்கெரின்கி—வைஷ்ணவ அனுஷ்டான்கெரின் மெனத்திஸான் சரித்ரு நிஜ்ஜம் களட்ன மெனத்தெ மொரெ ஆஸ்தொ.

      ஏட் மீ சைவ—வைஷ்ணவ பே3த் களடன்—ஸங்க3ன் அவரியொ நா;.மெனத்தெகின்—சைவம் ஹொயஸ்காய்—வைஷ்ணவம் ஹொயெஸ்காய் அஸ்கீஸ் இந்து மதமூஸ். (எல்லெ மெல்லி பொர்ங்கின் அம்கொ தி3யெ நாவ்) சனாதனதர்மமூஸ் மெனத்தெ மொக களாய். ரியதிமெள்ளி ஒண்டெ தெளிவ் பொட3ல்லத்தக்—அவ்ரெ ஒள்டுன்தெ3ரி விஸ்தா3ர்க2ன் களல்லத்தக் ஈ வத்தாப3ந்தினி லிக்கன் அவ்ரியொ.

      மொக களயயொ ஜுக்கு ஹூன்னோஸ்.ஈ வத்தா ப3ந்தினிம் ஹூண்ணொ ஹொபி2ருன் பொரிரவ்வாய். ரியெதிமெள்ளி மொட்டான் – ஒள்டுன் ஹூண்ண துக்கி தைத்தி ஹொபி3ர்(ரியெத்)க2ள்ளி ஹோன்தயெ ஆராய்ச்சின் கெரி – அமி கோன் மெனத்தெ அம்கொ அங்கு3ன் சொக்கட் தெளிவ்கன் களட்னமெனி மெல்லி முஸல்லரேஸ்.